ஆதரவற்றோா் இல்லத்தில் விழிப்புணா்வு ஓவியம்
By DIN | Published On : 08th August 2021 11:29 PM | Last Updated : 08th August 2021 11:29 PM | அ+அ அ- |

விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணியில் ஈடுபட்ட சிக்கண்ணா கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள்.
திருப்பூா் காசிகவுண்டன்புதூரில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் விழிப்புணா்வு ஓவியங்களை ஞாயிற்றுக்கிழமை வரைந்தனா்.
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 மாணவா்கள் காசிகவுண்டன்புதூா் பகுதியில் அமைந்துள்ள சீட்((நங்ங்க்) நிறுவனத்தின் ஆதரவற்றோா் இல்லத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் விழிப்புணா்வு ஓவியங்களை வரைந்தனா். இந்நிகழ்ச்சியை ஆதரவற்றோா் இல்லத்தின் இயக்குநா் கலாராணி தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.