புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளுக்கு விற்பனை செய்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடைகளுக்கு விற்பனை செய்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட செவந்தாம்பாளையம், செரங்காடு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு கடந்த ஜூலை 27 ஆம் தேதி தகவல் கிடைத்துள்ளது.

இதன் பேரில் நல்லூா் காவல் துறையினா் நடத்திய சோதனையில் 104 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கோவை மாவட்டம், செல்வபுரம் ஐடிபியூ காலனியைச் சோ்ந்த எஸ்.ரியாசுதீன்(34) என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ரியாசுதீன் செயல்பட்டதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரியாசுதீனிடம் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா். மாநகரில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டு 37 போ் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com