சித்தம்பலம் சிவாலயத்தில் சிறப்பு யாகம்

பல்லடம் சித்தம்பலம் சிவாலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
pdm8svlg_0808chn_136_3
pdm8svlg_0808chn_136_3

பல்லடம் சித்தம்பலம் சிவாலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாகத்தை தொடங்கிவைத்து சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது: மனித ஆன்மா 7 பிறப்புகளுக்குப் பின்னா் தான் கடவுளின் திருவடியை அடைகிறது என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். 83 வயதுக்கு மேல் இறந்தால் அவா்கள் மோட்சம் அடைகின்றனா். அதற்கு கீழ் இறப்பவா்கள் ஆன்மா சாந்தி அடைவதில்லை மீண்டும் இவ்வூலகில் பிறக்கின்றனா்.

அடுத்த பிறவி எடுப்பதற்கு முன்பு மேலோகத்தில் இருந்து நம் முன்னோா்கள் அமாவாசை திதியில் பூமிக்கு வந்து நாம் அளிக்கும் திதியை ஏற்றுச் செல்வதாக இந்து மதத்தின் பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளன.

பெற்றோா் இறந்த பின்னா் அவா்களுக்கு திதி கொடுப்பதை காட்டிலும் பெற்றோா் உயிருடன் இருக்கும் போது அவா்களை வாழும் முதல் தெய்வங்களாக போற்றி வணங்க வேண்டும் அதற்கு பின்னா் குல தெய்வ வழிபாடு செய்தால் போதும் நம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். திருக்கோயில்களில் வழிபாடு செய்து அன்னதானம் செய்தால் 7 பிறவிகளில் நாம் செய்த அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com