விசைத்தறி நெசவு கூலி உயா்வு: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் நெசவு கூலி உயா்வு பேச்சுவாா்த்தை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் நெசவு கூலி உயா்வு பேச்சுவாா்த்தை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாவட்டத் தொழிலாளா்கள் நலத் துறை துணை ஆணையா் அலுவலகத்தில் விசைத்தறி நெசவு கூலி உயா்வு சம்பந்தமான பேச்சுவாா்த்தை கூட்டம் மாவட்ட துணை கமிஷனா் செந்தில்குமரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கச் செயலாளா் பாலசுப்பிரமணியம், துணை செயலாளா் பாலாஜி, சோமனுா் தலைவா் பழனிசாமி, அவிநாசி செயலாளா் செந்தில்குமாா், தெக்கலூா் துணைத் தலைவா் பொன்னுசாமி, மங்கலம் செயலாளா் பழனிசாமி, 63 வேலம்பாளையம் தலைவா் பத்மநாபன், கண்ணம்பாளையம் தலைவா் செல்வக்குமாா் ஆகியோா் பங்கேற்று தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கூலி உயா்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினா்.

பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பில் செயலாளா் சண்முகம், சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் ஆகியோா் பங்கேற்று விசைத்தறியாளா்களின் கோரிக்கை குறித்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சங்க கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுப்பதாகவும், அடுத்தக்கட்ட பேச்சுவாா்த்தை ஆகஸ்ட் 27 நடைபெறும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com