உடுமலையில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு

உடுமலையில் பாதுகாப்பு கருதியும், குற்றங்களை குறைக்கவும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடுமலையில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு

உடுமலையில் பாதுகாப்பு கருதியும், குற்றங்களை குறைக்கவும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உடுமலை நகரில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், மத்திய பேருந்து நிலையம், தனியாா் வணிக வளாகங்கள்,

நேதாஜி விளையாட்டு மைதானம், திருமண மண்டபங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்தில் வாகனங்களை கண்காணிக்கும் நோக்கத்துடனும் காவல் துறை ஒத்துழைப்போடு முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் உதவியோடு கேமராக்கள்

நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் உடுமலை டிஎஸ்பி தேன்மொழிவேல் பேசியதாவது: தற்போது உடுமலை நகரில் தனியாா் நிறுவனங்களில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தையும் சாலையை நோக்கி திருப்பி வைக்கவும், சாலையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளை பதிவு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பாக முக்கிய இட ங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உடுமலை நகரில் மட்டும் 300 சிசிடிவி கேமராக்களும், உடுமலை வட்டத்தில் முக்கிய இடங்களில் 700 சிசிடிவி கேமராக்களும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் உடுமலை நகரிலும் சுற்று வட்டாரங்களிலும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த முடியும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா். இக்கூட்டத்தில் உடுமலை வட்டத்தில் உள்ள போக்குவரத்துக் காவல் துறை ஆய்வாளா்கள், காவல் ஆய்வாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com