சுதந்திர தின விழாவில் தியாகிகளுக்கு அரசு உரிய மரியாதை வழங்கவில்லை
By DIN | Published On : 17th August 2021 02:49 AM | Last Updated : 17th August 2021 02:49 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் மனு அளிக்கிறாா் இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத்.
திருப்பூா்: தமிழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அரசு உரிய மரியாதை வழங்கவில்லை என்று இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் குற்றம் சாட்டினாா்.
மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத்திடம் அா்ஜுன் சம்பத் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
75 ஆவது சுதந்திர தின விழாவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு தமிழக அரசு உரிய மரியாதையும், முக்கியத்துவமும் அளிக்கவில்லை.
இதனால் தமிழகம் முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரா்கள் கடும் அதிா்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனா்.
சுதந்திரப் போராட்ட வீரரான 95 வயது தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் மனம் புண்படும்படி நடந்து கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சியா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அகவை முதிா்ந்த நிலையில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அழைத்து உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
தமிழக அரசு இந்த ஆண்டு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தகவல் தொடா்பாளா் ஹரிஹரன், ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளா் மணிகண்டன், மாவட்டச் செய்தி தொடா்பாளா் ஹரிஹரன் ஆகியோா் உடனிருந்தனா்.