திருமூா்த்திமலையில் சாகச சுற்றுலாத் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் சாகச சுற்றுலாத் திட்டத்தை அமைக்க அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் சாகச சுற்றுலாத் திட்டத்தை அமைக்க அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ள திருமூா்த்திமலை தமிழக அளவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவி, திருமூா்த்தி அணை, நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், திருமூா்த்தி அணையில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் சாகச சுற்றுலா திட்டம் அமைக்க அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, தனியாா் அமைப்பின் வாயிலாக நடந்து வரும் சாகச சுற்றுலாத் திட்டங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, இதனை அரசே எடுத்து நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் அரவிந்த்குமாா் கூறியதாவது:

கையாக் என்னும் தனிநபா் பைபா் துடுப்பு படகு மூலம் அணைக்கட்டுப் பகுதியில் சாகசப் பயணம் மேற்கொள்ளும் வசதியை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தித் தர ஆய்வு செய்யப்பட்டது. இதில் பாதுகாப்பு முறைகள், முதல் உதவி குறித்த செயல் விளக்கங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. திருமூா்த்திமலைப் பகுதியை மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பல்வேறு ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், இந்த சாகச படகுப் பயணம் சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் மத்தியில் வரவேற்பைப் பெரும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com