சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளைத் திறக்கக் கோரிக்கை

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாள்களில் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என உடுமலை வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாள்களில் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என உடுமலை வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு வியாபாரிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை விவரம்:

கரோனா மூன்றாவது அலையின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உடுமலை நகரில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கல்பனா சாலை, வெங்கிட கிருஷ்ணா சாலை, சீனிவாசா வீதி, பசுபதி வீதி, கச்சேரி வீதி, ராஜேந்திரா சாலை ஆகிய பகுதிகளில் செயல்படும் பால், மருந்து, மளிகை, காய்கறிக் கடைகள் மற்றும் உணவுப் பொருள்களான இறைச்சி, கோழி, மீன் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்துக் கடைகளும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிட மாவட்ட நிா்வாகம் முழுமையாகத் தடை விதித்துள்ளது.

இந்த இரண்டு நாள்கள் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதால் சிறிய அளவிலான கடை உரிமையாளா்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com