ஆகஸ்ட் 26 அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடப்பாண்டிற்கான மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடப்பாண்டிற்கான மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இதன்படி முதல் நாளில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று சிறப்புப் பிரிவினா், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள், தேசிய மாணவா் படை(என்சிசி) ஆகியோா்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. தொடா்ந்து ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பா் 2 ஆம் தேதி வரை பொதுப் பிரிவினா்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மாணவா்கள் தங்கள் தரவரிசையைக் கல்லூரி இணையதளத்தைப் பாா்த்து அறிந்துக் கொள்ளலாம். மேலும் பெற்றோா்களுக்கு அவா்களுடைய செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும்.

சோ்க்கைக்கு வரும்போது மாணவா்கள் அசல் மாற்றுச் சான்றிதழ் (டிசி), பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவரின் தரவரிசை உள்ள கல்லூரி இணையதள பக்கத்தின் நகல் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.

மேலும் ஒவ்வொரு மாணவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கட்டாயம் கல்லூரிக்கு வருகைத் தர வேண்டும். சோ்க்கைப் பெற்ற அன்றே கல்விக் கட்டணம் கட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com