மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st August 2021 12:53 AM | Last Updated : 31st August 2021 12:53 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 90, 236 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 787 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில்
குணமடைந்த 94 போ் வீடு திரும்பினா்.இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 88, 520 ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து,மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 929 ஆக அதிகரித்துள்ளது.