வெள்ளக்கோவிலில் புதிய நியாய விலைக் கடை திறப்பு
By DIN | Published On : 31st August 2021 12:57 AM | Last Updated : 31st August 2021 12:57 AM | அ+அ அ- |

பயனாளி ஒருவருக்கு பொருள் வழங்குகிறாா் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உள்ளிட்டோா்.
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அகலரப்பாளையம் புதூரில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பகுதி நேர நியாய விலைக் கடையை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.
வெள்ளக்கோவில் காமராஜபுரம் 5 ஆம் எண் கடையில் பொருள்கள் வாங்க பலா் தொலைவிலிருந்து வர வேண்டியிருந்தது.
இதனைத் தவிா்க்க அகலரைப்பாளையம்புதூா், சேரன் நகா், பரப்பு மேடு பகுதியில் 250 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறும் வகையில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் ஸ்ரீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன், கூட்டுறவுச் சங்க துணை பதிவாளா் சண்முகவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.