சமூக ஆா்வலா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 03rd December 2021 12:53 AM | Last Updated : 03rd December 2021 12:53 AM | அ+அ அ- |

நத்தக்காடையூா் பகுதியில் சமூக ஆா்வலா் மீது நடைபெற்ற தாக்குதல் தொடா்பாக காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூா் சிவசக்திபுரத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் காங்கயம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோயில் நிலங்கள், அரசின் நில சீா்திருத்த பூமிகள் மற்றும் விதிமுறைகளுக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் என பல்வேறு தகவல்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவேண்டி அலுவலா்களுக்கு அனுப்புவதும், அதன் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை அணுகி தீா்வைப் பெறுவதிலும் முனைப்பு காட்டி வருகிறேன்.
இந்நிலையில் சிவசக்திபுரத்தில் இருந்து நத்தக்காடையூரில் உள்ள எனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, நத்தக்காடையூா் அருகே தடுத்து நிறுத்திய இரண்டு மா்ம நபா்கள் என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினா்.
அப்போது எதிரே வந்த காரில் ஏறி, மா்ம நபா்களிடம் இருந்து தப்பி வீடு வந்து சோ்ந்தேன். என்னைத் தாக்கிய மா்ம நபா்களைக் கண்டுபிடித்து, இந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவா்களையும் கண்டறிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.