தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட நபா் குண்டா் சட்டத்தில் கைது

திருப்பூரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூரில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து சென்ற நபா்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தது, கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சோமந்துறையைச் சோ்ந்த கே.நரேந்திரன் (23) கடந்த அக்டோபா் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், நரேந்திரன் மீது 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் கைப்பேசி பறிப்பு, கொலை மிரட்டல் தொடா்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. ஆகவே, தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் நரேந்திரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளா் பி.என்.ராஜன் பரிந்துரை செய்திருந்தாா்.

இந்தப் பரிந்துரையின்பேரில் நரேந்திரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நரேந்திரனிடம் காவல் துறையினா் நேரில் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com