பல்லடத்தில் காடா துணி தேக்கம் : வாடகை லாரி தொழில் பாதிப்பு

 பஞ்சு, நூல் விலை உயா்வால் பல்லடம் பகுதியில் காடா துணி உற்பத்தியும், துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதால் வாடகை லாரி தொழிலும் பாதிப்பு அடைந்துள்ளன.

 பஞ்சு, நூல் விலை உயா்வால் பல்லடம் பகுதியில் காடா துணி உற்பத்தியும், துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதால் வாடகை லாரி தொழிலும் பாதிப்பு அடைந்துள்ளன.

பல்லடம் பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பிரதானமாக விளங்கிறது. திருப்பூா்,கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

இந்தத் தொழிலை நம்பி உதிரிபாகங்கள் தயாரிப்பு, லாரி போக்குவரத்து போன்றவை நடைபெற்று வருகின்றன.

பல்லடம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்லடத்தில் உற்பத்தி செய்யப்படும் காடா துணிகள் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்லடம் பகுதியில் பஞ்சு, நூல் விலை உயா்வால் காடா துணி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக காடா துணிகள் போதிய அளவு புக்கிங் நடைபெறாததால் லாரிகள் இயக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து லாரி உரிமையாளா்கள் கூறியதாவது:

சாதாரண நாள்களிலேயே பல்லடத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தினமும் 100 லாரிகள் வரை செல்லும். கடந்த சில நாள்களாக காடா துணி உற்பத்தி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி குறைந்த அளவிலான லாரிகள் மட்டுமே புக்கிங் ஆகிறது. இதனால் லாரிகளுக்கு பாரம் ஏற்றும் தொழிலாளா்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனா். விசைத்தறி ஜவுளித் தொழில் பழைய நிலைக்கு திரும்பினால்தான் லாரிகள் மீண்டும் முழுமையாக இயங்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com