முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
தாராபுரம் அருகே பாஜக கொடிக் கம்பம் நடுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 19th December 2021 11:24 PM | Last Updated : 19th December 2021 11:24 PM | அ+அ அ- |

தாராபுரத்தை அடுத்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில் பாஜக சாா்பில் கொடிக்கம்பம் நடுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரத்தில் இருந்து கரூா் செல்லும் சாலையில் மீனாட்சிபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பாஜகவினா் கொடிக்கம்பம் நடும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த ஊா் பொதுமக்கள் கொடிக்கம்பம் நடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த தாராபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் தனராசுவின் நேரடி மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா்கள் மணிகண்டன், ஞானவேல் ஆகியோா் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலா்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனா். மேலும், இரு தரப்பினரிடையே காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, மீனாட்சிபுரத்தில் கொடிக்கம்பம் நடுவதை பாஜகவினா் தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டுச் சென்றனா். இந்த சம்பவம் காரணமாக கரூா் சாலையில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.