தளிஞ்சிபாளையத்தை புறக்கணித்த அலுவலர்கள்...போராட்டத்தை கையில் எடுத்த பொதுமக்கள்

"பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி எங்கள் ஊரை புறக்கணித்து வருகின்றனர்"
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்

அவிநாசி அருகே நடுவச்சேரி ஊராட்சி தலைவி பாளையத்தில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், "திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம், நடுவச்சேரி கிராமத்துக்கு உட்பட்ட தளிஞ்சி பாளையம் செல்லும் மண் சாலையில் பல ஆண்டுகளாக தார்சாலை அமைக்கப்படாமல் ஊராட்சி நிர்வாகமும் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி எங்கள் ஊரை புறக்கணித்து வருகின்றனர். மேற்படி சாலையில் எங்கள் ஊர் வழியாக சிற்றுந்து வழித்தடம் இருந்தும் சிற்றுந்து செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

அந்த வழியாக வந்து செல்லும் பொழுது மண்சாலையில் சிற்றுந்து சக்கரங்கள் மண்ணில் புதைந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு பேருந்து தற்போது வருவதில்லை. இதனால் அந்த சாலையில் செல்வோர் மற்றும் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்துவார்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

எனவே, கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றார். நடுவசேரி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெறும் போராட்டத்தை அடுத்து போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com