மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தளி சாலையில் உள்ள சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயம்
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தளி சாலையில் உள்ள சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

உடுமலையில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

உடுமலையில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

உடுமலை நகரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயம் ஆகியவற்றில் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து காலை 8.30 மணிக்கு இரண்டாம் ஆராதனை நடைபெற்றது. இதேபோல நகரில் உள்ள பல தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. முன்னதாக அதிகாலை 12 மணிக்குப் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கப்பட்டன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். மேலும் கிறிஸ்தவா்கள் வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com