மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th December 2021 01:39 AM | Last Updated : 25th December 2021 01:39 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 98,369 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 480 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 57 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 96,869 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா இறப்பு எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளது.