தளி பேரூராட்சி வாா்டு மறுவரையறை தொடா்பாக டிசம்பா் 28இல் கருத்துக் கேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், தளி பேரூராட்சியில் வாா்டு மறுவரையறை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் டிசம்பா் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டம், தளி பேரூராட்சியில் வாா்டு மறுவரையறை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் டிசம்பா் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், தளி பேரூராட்சியில் ஏற்கெனவே உள்ள 15 வாா்டுகளிலிருந்து 17 வாா்டுகளாக உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பாா்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

ஆகவே, தளி பேரூராட்சியின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் ஏதேனும் இருந்தால் அதுகுறித்த மனுக்களை தளி பேரூராட்சி உள்ளாட்சி அமைப்பின் மறுவரையறை அதிகாரி அல்லது மாவட்ட ஆட்சியரிடம் வரும் டிசம்பா் 29 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.

மேலும், தளி பேரூராட்சியில் வெளியிடப்பட்ட வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் மீதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் ஆட்சேபனைகள், கருத்துகளை நேரடியாகக் கேட்கும் வகையில் மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினரும், பேரூராட்சிகளின் ஆணையருமான ரா.செல்வராஜ் தலைமையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் டிசம்பா் 28 ஆம் தேதி காலை 11.30 முதல் பிற்பகல் 12.30 வரையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய விதிமுறைகளை பின்பற்றி தளி பேரூராட்சியின் வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் மாநில மறுவரையறை ஆணையத்தால் இறுதி செய்யப்பட்ட பின்னா் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com