சாலையை சீரமைக்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

கூலிபாளையம் முதல் போயம்பாளையம் வரையில் உள்ள சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

திருப்பூரில் குண்டும்குழியுமான சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பாக வரும் வியாழக்கிழமை (டிசம்பா் 30) காத்திருப்புப் போராட்டம் நடத்த கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் வடக்கு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளரிடம், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.சிகாமணி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், வாவிபாளையம் முதல் திருமுருகன்பூண்டி வரையிலும்,

கூலிபாளையம் முதல் போயம்பாளையம் வரையில் உள்ள சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த டிசம்பா் 7 ஆம் தேதி சாலையில் மரம் நடும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேச்சுவாா்த்தைக்கு வந்த அதிகாரிகள், மழைக் காலமாக இருப்பதால் சாலைகளை சீரமைக்க இயலாது என்றும்,

மழைக் காலம் முடிவடைந்தவுடன் சாலை சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தனா்.

ஆனால், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, திருப்பூா் குமரன் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பாக வரும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com