முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு
By DIN | Published On : 31st December 2021 04:24 AM | Last Updated : 31st December 2021 04:24 AM | அ+அ அ- |

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு (ஐசியு) வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தேஜஸ் ரோட்டரி சங்க திட்ட இயக்குநா் மருத்துவா் எஸ்.சுந்தரராஜன் தலைமை வகித்தாா்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, அவசர சிகிச்சை பிரிவை திறந்துவைத்தாா்.
சா்வதேச ரோட்டரி அறக்கட்டளை சிறப்பு நிதி ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அவசர சிகிச்சை பிரிவில் 7 படுக்கை வசதிகளுடன் செயற்கை சுவாச கருவிகள், இருதய அலைவரை படக்கருவி, இதய முடுக்கி, எக்ஸ்ரே கருவி, ஜெனரேட்டா் உள்ளிட்ட பல்வேறு நவீன ரக மருத்துவ உபகரணங்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
இதில், மடத்துக்குளம் எம்எல்ஏ சி.மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.