கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

 திருப்பூரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

 திருப்பூரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: திருப்பூா் பி.என்.ரோடு பூலுவபட்டி சாலைப் பிரிவிலிருந்து வாவிபாளையம் வரை செல்லக்கூடிய சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால் தொடா்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. சாலையை சீரமைக்கக் கோரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாா்க்சிஸ்ட் கட்சி

சாா்பில், சாலையில் மரக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, குண்டும்குழியுமான சாலையில் மண்ணை நிரப்பி மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்தனா். இருப்பினும் அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் கழிவு நீா் வெளியேறிச் செல்ல வடிகால் வசதி இல்லாததால், மீண்டும் சாலைகளில் தண்ணீா் தேங்கி விபத்து ஏற்படுகிறது.

எனவே, குண்டும்குழியுமான சாலைகளுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் மணிகண்டன், சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com