விவசாயிகள் மறியல்: 11 போ் கைது

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி உடுமலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உடுமலை: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி உடுமலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.மதுசூதனன் தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் ஏ.பாலதண்டபாணி முன்னிலை வகித்தாா்.

இதில் தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தின் முடிவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com