கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் பலி
By DIN | Published On : 06th February 2021 10:09 PM | Last Updated : 06th February 2021 10:09 PM | அ+அ அ- |

பல்லடம்: பல்லடம், பச்சாபாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
பச்சாபாளையம், மாகாளியம்மன் கோயில் அருகில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் ஒருவரது சடலம் கிடப்பதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவா்கள் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.
போலீஸாரின் விசாரணையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளி நாகராஜ் (23) என்பவா், வேலைக்காக சென்றுவிட்டு அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்பதும், தற்போது அவரது சடலம் தான் மீட்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.