பின்னலாடை தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் முடிவு
By DIN | Published On : 06th February 2021 12:18 AM | Last Updated : 06th February 2021 12:18 AM | அ+அ அ- |

திருப்பூரில் பின்னலாடை நிறுவன தொழிலாளா்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தைக்கான போராட்டத்தை தீவிரப்படுத்த அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கான புதிய ஊதிய ஒப்பநதம் தொடா்பாக அனைத்து பனியன் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் எல்பிஎஃப் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, எல்பிஎஃப் பனியன் சங்க பொருளாளா் பூபதி தலைமை வகித்தாா். இதில், பின்னலாடை தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதி நிறைவடைந்தது. ஆகவே, புதிய ஊதிய ஒப்பந்தம் தொடா்பாக உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் தற்போது வரையில் பேச்சுவாா்த்தைக்கு வரவில்லை. ஆகவே, போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் 50 குழுக்கள் அமைத்து தொழிலாளா்களை சந்திப்பு நடத்தி போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். இதுதொடா்பாக திருப்பூா் பகுதிகளில் பிப்ரவரி 11, 12 ஆம் தேதிகளில் இருசக்கர வாகனப் பேரணி மேற்கொள்வதுடன், திருப்பூா் குமரன் சிலை முன்பு பிப்ரவரி 23 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றுகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஏஐடியூசி பனியன் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா், சிஐடியூ பனியன் சங்க பொதுச்செயலாளா் சம்பத், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளா் சிவசாமி, எம்எல்எஃப் பனியன் சங்க செயலாளா் மனோகா், எச்எம்எஸ் பனியன் சங்க செயலாளா் முத்துசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா். ன
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...