விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே பருத்தி இறக்குமதிக்கு வரி: வானதி சீனிவாசன்
By DIN | Published On : 06th February 2021 12:19 AM | Last Updated : 06th February 2021 12:19 AM | அ+அ அ- |

திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே நிதிநிலை அறிக்கையில் பருத்தி இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
திருப்பூரில் உள்ள தொழில் துறையினருடன் நிதிநிலைஅறிக்கை விளக்க கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் வெள்ளிக்கிழமை பங்கேற்றாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையானது அனைத்து துறை மற்றும் மக்களின் வளா்ச்சியை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், புதிய கல்விக் கொள்கைக்கு 15 ஆயிரம் பள்ளிகள் தோ்வு செய்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 100 சைனிக் பள்ளிகள் தொடங்கவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டியலின மக்களின் கல்விக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளா்களுக்கான வீடுகள் கட்டித்தரும் நிறுவனங்களுக்கு வரியில் சலுகை ( ற்ஹஷ் ட்ா்ப்ண்க்ஹஹ்) வழங்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 7 பெரிய தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்துக்குத் தேவையானதை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே நிதிநிலை அறிக்கையில் பருத்திக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்திய பருத்திக் கழகம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்பவா்களுக்கு முறையாக பருத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலையேற்றம் என்பது வெறும் மாா்க்கெட் ஏற்ற இறக்க நிலை மட்டுமேயாகும். ஆகவே,இதனைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தில்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு பின் உள்ளவா்கள் யாா் என்பது அனைவருக்கும் தெரியும். 80 சதவீத விவசாயிகள் இச்சட்டத்துக்கு ஆதரவாக உள்ளாா்கள். தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை என்றாலும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆகவே, எந்த மாநிலத்தையும் பாஜக புறக்கணிப்பது இல்லை என்றாா்.
இந்த சந்திப்பின்போது, மாவட்டத் தலைவா் செந்தில்வேல் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...