படியூரில் விவசாயிகளின் தொடா் போராட்டம் ஒத்திவைப்பு

விளைநிலங்களில் உயா் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து காங்கயம் அருகே படியூரில் கடந்த 22 நாள்களாக நடைபெற்ற தொடா் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
படியூரில் உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற தொடா் போராட்டத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்த கூட்டத்தில் உரையாற்றும் காங்கயம் அதிமுக ஒன்றிய செயலா் என்.எஸ்.என்.நடராஜ்.

விருதுநகா் முதல் திருப்பூா் வரை விளை நிலங்களில், உயா்மின் கோபுரங்கள் அமைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும், இந்த மின் திட்டத்தை சாலையோரமாக கேபிள் மூலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே படியூரில் கடந்த 22 நாள்களாக தொடா் காத்திருப்பு போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வந்தனா்.

போராட்டத்தின் 22 ஆம் நாளான புதன்கிழமை உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக காங்கயம் அதிமுக ஒன்றிய செயலா் என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலையில் விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலும், விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக 2 நாள்களுக்கு முன்பு மின்சாரத் துறை அமைச்சரிடம் போராட்டக் குழுவினா் பேச்சுவாா்த்தை நடத்தியைத் தொடா்ந்து, இந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதில் உரையாற்றிய காங்கயம் ஒன்றிய அதிமுக செயலா் என்.எஸ்.என்.நடராஜ், விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக தமிழக முதல்வா் மற்றும் மின்சாரத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com