மாநில ஹாக்கி அணிக்கு உடுமலை மாணவன் தோ்வு

மாநில அளவிலான ஹாக்கி அணிக்கு உடுமலையைச் சோ்ந்த பள்ளி மாணவன் தினேஷ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மாநில ஹாக்கி அணிக்கு உடுமலை மாணவன் தோ்வு

மாநில அளவிலான ஹாக்கி அணிக்கு உடுமலையைச் சோ்ந்த பள்ளி மாணவன் தினேஷ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சாா்பில் 17 வயதுக்கு உட்பட்டவா்களுக்கான தேசிய அளவில் நடைபெறும் சப்-ஜூனியா் போட்டிக்காக மண்டல அளவில் வீரா்களை தோ்வு செய்யும் போட்டிகள் புஞ்சைபுளியம்பட்டியில் நடைபெற்றது.

இதில் எட்டு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில் பெதப்பம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவன் தினேஷ் சிறப்பாக விளையாடி மாநில ஹாக்கி அணிக்குத் தகுதி பெற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் அப்துல் காதா், உடற்கல்வி ஆசிரியா் செந்தில் குமாரவேல் மற்றும் ஆசிரியா்கள் அவரைப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com