திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவில்லை: கனிமொழி

திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவில்லை என்று திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி.குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் கனிமொழி எம்.பி.
திருப்பூர் மாவட்டத்தில் கனிமொழி எம்.பி.

திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவில்லை என்று திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி.குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் பயணம் என்ற தலைப்பில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. 3 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உள்ள திருப்பூர் குமரன், பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து 2 ஆவது நாள் தேர்தல் பிரசாரத்தைத் வெள்ளிக்கிழமை தொடங்கினார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்று அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். இதன்பிறகு காதர் சலீமா மண்டபத்தில் கிறிஸ்துவ திருச்சபை நிர்வாகிகளை சந்தித்தார். 

இதன் பிறகு காங்கயம் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி.பேசியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த வியாழக்கிழமை திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டபோது செய்யாததை எல்லாம் செய்ததாக சொல்லிச் சென்றுள்ளார். திருப்பூர் மாநகரில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணப்படவில்லை. ஊத்துக்குளி சாலையில் கடந்த 8 ஆண்டுகளாக பாலம் கட்டுமுடிக்கப்படாமல் உள்ளதால் மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. 

மாநகரில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்ததால் எல்லா இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளது. மாநகரில் உள்ள மக்களை சந்தித்தபோது அனைவரும் குப்பைகளை அள்ளுவதில்லை. தொழில்கள் மிகுந்த இந்த நகரில் உள்கட்டமைப்பு வசிதிகளும் சரியாக இல்லை என்ற பல பிரச்னைகளையும் எடுத்துரைத்தனர். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தித் தொழிலாளனது ஜிஎஸ்டி, கரோனா நோய்த் தொற்றால் மிகப்பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படவில்லை.ஆகவே, பின்னலாடைத் தொழிலில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

உடுமலையில்தமிழக முதல்வர் பேசுகையில் கனிமொழி செல்லும் இடங்களில் எல்லாம் பொய்யான பிரசாரம் செய்து மக்களை திசை திருப்புகின்றனர் தொடர்பான கேள்விக்கு, நாங்கள் கிராமசபைக்கூட்டங்ளுக்கு செல்லும் போதுமக்கள் சொல்லும் கருத்துக்களைத்தான் முதலில் கேட்டுக் கொள்கிறோம்.மக்கள் சொல்லும் குறைகள்தான் நியாயவிலைக்கடை சரியில்லை, சுய உதவிக்குழுக்கள் சரியாக இயங்கவில்லை, அடிப்படை வசதி சரியில்லை என்பது எல்லாம் மக்கள் சொல்லும் கருத்துக்கள்தான். குடிமராமத்துப்பணிகள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே தூர்வராப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அடிமையாக இருந்ததாக முதல்வர் பேசியது தொடர்பான கேள்விக்கு திமுக எந்தக்காலத்திலும் யாருக்கும் அடியைமயாக இருந்தது கிடையாது. கொள்கை ரீதியான கருத்து முரண்பாடு ஏற்பட்டபோது அந்தக்கூட்டணியில் இருந்து வெளிவரக்கூடிய தைரியமும் எங்களுக்கு இருந்திருக்கிறது என்றார். இந்த சந்திப்பின்போது, திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி.மு.நாகராசன், தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com