காங்கயத்தில் பிப்ரவரி 15இல் கால்நடைத் திருவிழா

காங்கயம் அருகே உள்ள முள்ளிப்புரம் பகுதியில் காங்கேயம் கால்நடைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
காங்கேயம் இன பூச்சிக் காளை. ~காங்கேயம் இன செவலை மாடுகள்.
காங்கேயம் இன பூச்சிக் காளை. ~காங்கேயம் இன செவலை மாடுகள்.

காங்கயம் அருகே உள்ள முள்ளிப்புரம் பகுதியில் காங்கேயம் கால்நடைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளா் காா்த்திகேய சிவசேனாபதி கூறியதாவது:

திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்தும் காங்கேயம் கால்நடைத் திருவிழா திங்கள்கிழமை (பிப்ரவரி 15) காங்கயம் அருகே நத்தக்காடையூா் சாலை, பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி அருகே உள்ள முள்ளிபுரத்தில் நடைபெறவுள்ளது.

இயற்கை மீதும், பாரம்பரியக் கால்நடைகள் மீதும் ஆரம்பம் முதலே மிகுந்த ஈடுபாடு கொண்டு அவற்றைப் பேணிப் பாதுகாத்து வருகிறோம். அந்த வகையில் அழிவின் விளிம்பில் இருந்த காங்கேயம் இனக் கால்நடைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை தொடங்கி காங்கேயம் காளைகளைப் பாதுகாத்து வருகிறோம். அதன் எண்ணிக்கையை அதிகரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

பாரம்பரிய கால்நடைகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக காங்கேயம் கால்நடைத் திருவிழா-2021 என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இதில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

சிறந்த காளைகளுக்குப் பரிசுகள்:

சிறந்த காளைகளுக்கு 13 பிரிவுகளில் முதல் 4 இடங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதில் பெரிய பூச்சிக் காளைகள், எருதுகள், மயிலை மாடுகள், செவலை மாடுகள், காரி மாடுகள், இதேபோல 4 பற்கள் வரை என்ற வகைப்பாட்டிலும், பல் போடாத என்ற வகைப்பாட்டிலும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com