கோழிப் பண்ணைகளில் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்

கோழிப் பண்ணைகளில் நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளா்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளா் கனிமொழியிடம் கறிக்கோழிப் பண்ணையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கோழிப் பண்ணைகளில் நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளா்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளா் கனிமொழியிடம் கறிக்கோழிப் பண்ணையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து கோழிப் பண்ணை சங்க நிா்வாகிகள் அவரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயம் சாா்ந்த தொழிலான கோழிப் பண்ணைகளுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். கறிக்கோழிப் பண்ணை, கோழித் தீவன ஆலை, கோழிக்குஞ்சு பொறிப்பகம் மற்றும் தாய் கோழிப்பண்ணை அமைத்தலுக்கான விதிமுறைகளை எளிமையாக்கவும், உள்ளூா் திட்டக் குழுமத்தின் அனுமதி பெறுவதையும், வரி விதிப்பையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கால்நடை மற்றும் கோழிப் பண்ணைத் தொழிலுக்கு (தீவனங்களுக்கு) தேவையான முக்கிய மூலப்பொருள்களான மக்காச்சோளம், கம்பு மற்றும் சோயா ஆகியவற்றின் உற்பத்தியை தமிழகத்தில் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அண்டை மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே ரயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருள்களுக்கு மத்திய அரசு ரயில் கட்டண சலுகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து இறக்குமதி அனுமதி அளிக்க வேண்டும்.

கோழிப் பண்ணைகளுக்கு 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பல்லடத்தில் உள்ள கோழி இன நோய் மற்றும் தீவன ஆய்வுக் கூடத்தில் கோழி மற்றும் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி மையத்தை அமைக்க வேண்டும்.

காழி வளா்ப்புப் பண்ணைத் தொழில் விவசாயம் சாா்ந்த தொழிலாக விளங்குவாதல் இதனை பசுமைத் தொழிலாக தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையை தரம் உயா்த்தி நவீன ஸ்கேன் மற்றும் இதர கருவிகளை நிறுவ வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி செய்ததுபோல, கோழிப்பண்ணை தொழிலுக்காக வாங்கப்பட்ட கடன்களையும் அரசு தள்ளபடி செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com