திருப்பூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 13th February 2021 10:56 PM | Last Updated : 13th February 2021 10:56 PM | அ+அ அ- |

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நாடகத்தில் பங்கேற்ற மாணவா்கள்.
திருப்பூா்: சாலைப் பாதுகாப்பு விழாவை ஒட்டி திருப்பூரில் சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் அலகு- 2 மற்றும் திருப்பூா் மாநகர போக்குவரத்து காவல் துறையினா் இணைந்து புஷ்பா ரவுண்டானா அருகே 32ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவினை ஒட்டி சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகர போக்குவரத்து உதவி ஆணையா் கோடிசெல்வன், போக்குவரத்து ஆய்வாளா்கள் பாண்டியராஜன், தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அலகு -2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா்.
மாணவ செயலா்கள் சந்தோஷ், சந்தீப், காமராஜ் தலைமையில் 35க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் யோகா, மது போதையில் வாகனம் ஓட்டக் கூடாது, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லக் கூடாது என்பதை வலியுறுத்தி நாடகங்கள் நடைபெற்றன.
மேலும் எமன் வேடமணிந்து தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவா்களுக்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வநியோகிக்கப்பட்டன. பின்னா் சாலை விதிகளை பின்பற்றுவோம் என உறுதிமொழி ஏற்றனா்.