தாராபுரத்தில் சாலைப் பணியை விரைவுபடுத்தக்கோரி எஸ்டிபிஐ மனு
By DIN | Published On : 19th February 2021 08:41 AM | Last Updated : 19th February 2021 08:41 AM | அ+அ அ- |

தாராபுரத்தில் சாலைப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி எஸ்டிபிஐ கட்சியினா் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இது தொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் எம்.முஹம்மது இஸ்மாயில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தாராபுரம், சீரா சாஹிப் தெருவில் தொடங்கப்பட்ட சாலைப் பணியானது மெதுவாக நடைபெற்று வருகிறது. சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, சாலைப் பணியை விரைவுபடுத்த வேண்டும். அதேபோல, நகரின் மையப் பகுதியான பூக்கடை காா்னரில் கழிவுநீா் கால்வாய் உடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, கழிவுநீா் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் நிகழ்வில் தாராபுரம் தொகுதிச் செயலாளா் எம்.சையது அபுதாஹிா், சங்கா் மில் கிளைத் தலைவா் முஹம்மது இக்பால், கிளைச் செயலாளா் மன்சூா் ஆகியோா் உடனிருந்தனா்.