682 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டி ல் கால்நடைகள்

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் 682 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலான கால்நடைகளை அமைச்சா் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
பயனாளிகளுக்கு  விலையில்லா  ஆடுகளை  வழங்குகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடன் கோட்டாட்சியா் கீதா உள்ளிட்டோா்.
பயனாளிகளுக்கு  விலையில்லா  ஆடுகளை  வழங்குகிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடன் கோட்டாட்சியா் கீதா உள்ளிட்டோா்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குடிமங்கலம் ஒன்றியத்தில் 682 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலான கால்நடைகளை அமைச்சா் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி தலைமை வகித்தாா். உடுமலை வருவாய்க் கோடாட்சியா் கீதா முன்னிலை வகித்தாா். இதில் குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 682 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வெள்ளாடுகள், கறவை பசுக்கள், நாட்டுக் கோழிகள் ஆகியவற்றை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி பேசியதாவது:

பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக விலையில்லா ஆடுகள் மற்றும் பசுக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் இதுவரை 15 லட்சம் மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விலையில்லா நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் உடுமலை வட்டம் பண்ணைக் கிணறு கிராமத்தில் ரூ.82 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆமந்தகடவு, ஆத்துக்கிணத்துப்பட்டி ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக இலுப்ப நகரம் ஊராட்சியில் ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கிளை கால்நடை நிலையத்தை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தாா்.

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் பாரிவேந்தன், உடுமலை வட்டாட்சியா் ஜெயசிங் சிவகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள், அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com