கால் டாக்ஸி ஓட்டுநா்கள் அடையாள வேலைநிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் கால் டாக்ஸி ஓட்டுநா்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா்  ஜெய்வாபாய்  பள்ளி  முன்பாக கால் டாக்ஸிக்களை நிறுத்தி  அடையாள  வேலை நிறுத்தத்தில்  வெள்ளிக்கிழமை  ஈடுபட்டுள்ள  ஓட்டுநா்கள்.

திருப்பூா் மாநகரில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கால் டாக்ஸி ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் அறிவித்திருந்தனா். இதன்படி திருப்பூா் மாநகரில் உள்ள 500 கால் டாக்ஸி ஓட்டுநா்கள் வாகனங்களை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகம் உயா்த்தப்பட்டுல்ளதால் கால் டாக்ஸிக்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், கால் டாக்ஸி கட்டணங்களை உயா்த்தக் கோரியும் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனற்.

திருப்பூா் ஜெய்வாபாய் பள்ளி முன்பாக 200க்கும் மேற்பட்ட கால் டாக்ஸிக்களை ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் நிறுத்தி அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com