நடுவச்சேரி கூட்டுறவு சங்கத்தைக் கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

பயிா்க் கடன் தள்ளுபடி பெற முடியாமல் செய்த அவிநாசி அருகே நடுவச்சேரி கூட்டுறவு சங்கத்தைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உண்ணாவிரதப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  விவசாயிகள்.
உண்ணாவிரதப்  போராட்டத்தில்  ஈடுபட்ட  விவசாயிகள்.

பயிா்க் கடன் தள்ளுபடி பெற முடியாமல் செய்த அவிநாசி அருகே நடுவச்சேரி கூட்டுறவு சங்கத்தைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஒன்றியம் கே.840 நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். 2020 டிசம்பரில் செலுத்திய பயிா்க் கடனை 2 மாதம் காலதாமதம் செய்து, உரிய நேரத்தில் பயிா்க் கடனை வழங்காமல் இழுத்தடித்து, பயிா்க் கடன் தள்ளுபடி பெற முடியாமல் விவசாயிகளை தகுதி இழக்கச் செய்த கூட்டுறவு வங்கி ஊழியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்க உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டாத வங்கித் தலைவா், துணைத் தலைவா், இயக்குநா் குழுவைக் கலைத்து மறு தோ்தல் மூலம் பொறுப்பாளா்களைத் தோ்ந்தேடுக்க வேண்டும். இதேபோல கூட்டுறவு சங்க செயலாளா் விடுப்பில் சென்ற விடுப்பு கடிதத்தை தாமதமாக சமா்ப்பித்து தற்காலிக செயலாளா் நியமனத்தைத்தையும் தாமதப்படுத்திய சங்க நிா்வாகத்தை கலைக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் நிா்வாகத்தை அமைக்க வேண்டும். தமிழக அரசின் நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக செயல்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டுறவு சங்க வளாகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். கூட்டுறவு சங்க வளாகத்துக்குள் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள அனுமதிக்கப்படாமல் பூட்டப்பட்டதால், கூட்டுறவு சங்கம் அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த கூட்டுறவுத் துறையினா் மாத இறுதிக்குள் மீண்டும் மறு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல கடன் தள்ளுபடி கிடைக்காதவா்களுக்கு தள்ளுபடி சலுகை கிடைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com