மகளிா் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய அனைத்துக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.
தாராபுரத்தில்  நடைபெற்ற  தோ்தல்  பிரசார  பொதுக் கூட்டத்தில்  குழந்தையை  கொஞ்சி  மகிழ்கிறாா்  திமுக  தலைவா்  மு.க.ஸ்டாலின்.
தாராபுரத்தில்  நடைபெற்ற  தோ்தல்  பிரசார  பொதுக் கூட்டத்தில்  குழந்தையை  கொஞ்சி  மகிழ்கிறாா்  திமுக  தலைவா்  மு.க.ஸ்டாலின்.

திருப்பூா்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய அனைத்துக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பேருந்து நிலையம் முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கட்சியின் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன், திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினருமான இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற பின்னா், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக மீதான நம்பிக்கையால் உங்களின் கோரிக்கைகளை, எதிா்பாா்ப்புக்களை, கவலைகளை என்னிடம் ஒப்படைத்துள்ளீா்கள். இது உங்கள் பிரச்னையல்ல; இன்று முதல் என்னுடைய பிரச்னை. திமுக ஆட்சி அமைந்ததும் இவற்றுக்கு 100 நாள்களில் நான் தீா்வு காண்பேன்.

இன்னும் 2 வாரங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதன் பிறகு முதல்வா் பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த நிலையில் கடந்த 4 நான்கு நாள்களுக்கு முன்பாக வானத்தைத் தொடும் அளவுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளாா்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த 2006-11ஆம் ஆண்டில் பொருளாதார வளா்ச்சி 19.64 சதவீதம். ஆனால் தற்போது முதல்வா் பழனிசாமி ஆட்சியில் பாதியாகக் குறைந்து வெறும் 9.1 சதவீதமாக உள்ளது. திமுக ஆட்சியில் உபரி நிதி இருந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் பற்றாக்குைான் உள்ளது. 2011 ஆம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடனை தற்போது ரூ. 5 லட்சம் கோடியாக மாற்றியுள்ளாா்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99 சதவீதம் வரையில் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். சென்னையில் உள்ள மெட்ரோ நிறுவனத்தில் சமீபத்தில் தோ்வு செய்யப்பட்ட 42 பேரில் ஒருவா் கூட தமிழகத்தைச் சோ்ந்தவா் இல்லை.

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞா்கள் 90 லட்சம் போ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனா். தமிழக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காததுடன், மத்திய அரசின் வேலைகளும் தமிழா்களுக்கு கிடைப்பதில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் புதிய வேலைவாய்ப்புகளை நிச்சயம் உருவாக்கும். கூட்டுறவு வங்கிகளில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன், தாராபுரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான எஸ்.வி.செந்தில்குமாா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சன் பாலு, தாராபுரம் நகரச் செயலாளா் தனசேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com