பல்லடம் தீயணைப்பு நிலையத்தை நவீனப்படுத்த கோரிக்கை

பல்லடம் தீயணைப்பு நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று விசைத்தறி ஜவுளி துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம்: பல்லடம் தீயணைப்பு நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று விசைத்தறி ஜவுளி துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் பகுதியில் உள்ள விசைத்தறி துணி உற்பத்தி நிறுவனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் காரணமாக ஆண்டுதோறும் ஜவுளி தொழில் துறையில் பெரும் இழப்பு ஏற்படுகிறது. பல லட்சம் ரூபாய் செலவில் இயந்திரங்கள், பஞ்சு நூல் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின்றன.

இதனால் வாங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. பல்லடம் தீயணைப்பு நிலையம் நவீன மயமாக்கப்படாததால் தீ விபத்துகளை உரிய நேரத்தில் தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் தீ விபத்து ஏற்படும்போது தீயணைப்புத் துறையினரும் சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே தொழில் நகரமான பல்லடத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பல்லடம் தீயணைப்பு நிலையத்தில் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com