
காங்கயத்தில் நடைபெற்ற அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் வாகனம் வாங்குவதற்கான உத்தரவு ஆணையை வழங்கும் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார்
காங்கயம்: அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் மூலம் காங்கயத்தில் 93 பயனாளர்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான உத்தரவு ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை வகித்து, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் வாகனம் வாங்குவதற்கான உத்தரவு ஆணையை 93 பயனாளர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடேஸ்வரி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜே.ஜீவிதா ஜவஹர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.