
2 கன்றுகளை ஈன்ற பசுமாடு.
அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் பசுமாடு திங்கள்கிழமை 2 கன்றுகளை ஈன்றது.
அவிநாசி அருகே வேட்டுவபாளையம் ஊராட்சி அ.குரும்பபாளையம் பகுதியில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு திங்கள்கிழமை 2கன்றுகளை ஈன்றது. சினையாக இருந்த இந்த மாடு கடந்த ஜூன் மாதம் குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை குழியில் விழுந்து சிக்கிக்கொண்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் நீண்ட போராடி பசுமாட்டை மீட்டனா். இந்நிலையில் சிகிச்சை பெற்று, நல்ல முறையில் இருந்து வந்த பசுமாடு 2 கன்றுகளை ஈன்றது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.