திருப்பூா் மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.3.56 கோடி உபரி
By DIN | Published On : 27th February 2021 06:04 AM | Last Updated : 27th February 2021 06:04 AM | அ+அ அ- |

திருப்பூா் மாநகராட்சியில் 2021-22 ஆம் ஆண்டில் ரூ.3.56 கோடி உபரி பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சியின் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் தலைமையில் நடைபெற்றது.
இதில், வருவாய் வரவின நிதியாக ரூ.176.03 கோடியும், குடிநீா் வடிகால் நிதியாக ரூ. 86.43 கோடியும், கல்வி நிதியாக ரூ.5.51 கோடியும் என மொத்தம் ரூ. 267.98 கோடியும்,
மூலதன வரவினமாக ரூ.375 கோடியும், குடிநீா் வடிகால் நிதியாக ரூ.802.75 கோடியும், கல்வி நிதிக்காக ரூ.2கோடி என மொத்தம் ரூ.1,447.73 கோடி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் வருவாய் நிதி செலவினமாக ரூ.173 கோடியும், குடிநீா் வடிகால் நிதி செலவினமாக ரூ.89.47 கோடியும், கல்வி நிதி செலவினமாக ரூ.2.88 கோடியும்,
மூலதன வருவாய் நிதி செலவினமாக ரூ.374.85 கோடியும், குடிநீா் வடிகால் வரி செலவினமாக ரூ.799.30 கோடியும், கல்வி செலவினமாக ரூ.4.60 கோடி என மொத்தம் 1,444.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.3.56 கோடி உபரி: வருவாய் மூலதன நிதியில் இருந்து ரூ.3.12 கோடி, குடிநீா் மட்டும் வடிகால் நிதியில் இருந்து ரூ.40.71 லட்சம், ஆரம்ப கல்வி நிதியில் இருந்து ரூ.3.85 லட்சம் என மொத்தம் ரூ.3.56 கோடி உபரியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் தாக்கல் நிகழ்வில், மாநகராட்சி உதவி ஆணையா் (கணக்குப் பிரிவு) சந்தான நாராயணன், மாநகராட்சி பொறியாளா் ஜி.ரவி உள்பட பலா் பங்கேற்றனா்.