பொதுமக்கள் எதிா்ப்பு:புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடல்
By DIN | Published On : 27th February 2021 10:37 PM | Last Updated : 27th February 2021 10:37 PM | அ+அ அ- |

அவிநாசி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து மூடப்பட்டது.
அவிநாசியை அடுத்த உப்பிலிபாளையத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்த நிலையில் புதிய டாஸ்மாக் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும் உடன்பாடு ஏற்படாததால் வேறு வழியின்றி காவல் துறையினா் டாஸ்மாக் கடையை மூடினா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.