தத்தனூர் தொழில் பூங்காவிற்கு நிலம் எடுக்கப்படமாட்டாது என முதல்வர் அறிவிப்பு: அரசாணை வெளியிட வலியுறுத்தல்

அவிநாசி அருகே தத்தனூர் பகுதியில் தொழில் பூங்காவிற்கு நிலம் எடுக்கபட மாட்டாது என முதல்வர் அறிவித்ததையடுத்து, அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

அவிநாசி அருகே தத்தனூர் பகுதியில் தொழில் பூங்காவிற்கு நிலம் எடுக்கபட மாட்டாது என முதல்வர் அறிவித்ததையடுத்து, அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட தத்தனூர் ஊராட்சி பகுதியில் 890 ஏக்கரில் தொழில் பூங்கா அமையவிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அருகாமை ஊராட்சிகளான தத்தனூர், புலிப்பார், புஞ்சைத்தாமரைக்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த வாரம், திருப்பூர் அருகே பெருமாநல்லூருக்கு வந்திருந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தொழில் பூங்காவிற்கு நிலம் எடுக்கப்படமாட்டாது என உறுதியளித்துச் சென்றார். 

இருப்பினும், இதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவர் பி.கே.எஸ்.வேலுச்சாமி, புஞ்சைத்தாமரைக்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஜயலட்சுமி ராமிசாமி ஆகியோர் முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது; கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றித் தந்தமைக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

அதேநேரத்தில் விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பைத் தரக்கூடிய வகையில், தத்தனூர் பகுதியில் ஏற்படுத்தவிருக்கும் தொழில் பூங்காவை ரத்து செய்து அரசாணை வழங்க வேண்டும். எனவே உடனடியாக கோரிக்கையை ஏற்று, அரசாணை வெளியிட்டு மக்களின் மனதில் நீங்கா இடத்தையும், வருகிற சட்டப்பேரவையில் மிகப் பெரிய இடத்தையும் மக்கள் முதல்வர் பெறுவார் என நம்புகிறோம். மேலும் கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்து கொடுக்காவிடில் அதற்காக போராடவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஓயமாட்டோம் போராட்டங்களும் தொடரும். எங்களது வாழ்வாதாரமும் நாங்கள் வாழ்வதும் சாவதும் தமிழக அரசின் கையில் தான் உள்ளது. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com