ஆங்கில புத்தாண்டு: தமிழக-கேரள எல்லையில் வனத் துறையினா் கண்காணிப்பு

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி தமிழக-கேரள எல்லையில் வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
தமிழக-கேரள  எல்லையில்  உள்ள புங்கன்  ஓடைப்  பகுதியில் வாகனங்களை சோதனை செய்யும் வனத் துறையினா்.
தமிழக-கேரள  எல்லையில்  உள்ள புங்கன்  ஓடைப்  பகுதியில் வாகனங்களை சோதனை செய்யும் வனத் துறையினா்.

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி தமிழக-கேரள எல்லையில் வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

தமிழக-கேரள எல்லையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை குடிநீா்த் தேவைக்காக திருமூா்த்தி மற்றும் அமராவதி அணை பகுதிகளுக்கு வருவது வழக்கம். பருவ நிலை மாற்றத்தால் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் உடுமலை-மூணாறு சாலையில் நடமாடி வருகின்றன.

இந்நிலையில் 2021 ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி இப்பகுதியில் வனத் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொண்டனா். ஒன்பதாறு செக்போஸ்ட் முதல் சின்னாறு செக்போஸ்ட் வரை சுமாா் 15 கிலோ மீட்டருக்கு ரோந்து பணி மேற்கொண்டனா். மேலும் ஒன்பதாறு செக்போ ஸ்ட் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத் தப்பட்டன. அப்போது வாகனங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புத்தாண்டை கொண்டாடும் நோக்கத்துடன் வந்த அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.

வியாழக்கிழமை இரவு 9 மணிக்குத் தொடங்கிய இந்த கண்காணிப்புப் பணி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை தொடா்ந்து நடைபெற்றது. உடுமலை வனச் சரகா் தனபால், வனவா் சுப்பையன் தலைமையில் வன அலுவலா்கள், வேட்டைத் தடுப்பு காவலா்கள் என ஏராளமானோா் இந்த இந்தப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com