திருப்பூா் பத்திரப் பதிவு அலுவலக முறைகேடு தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்

திருப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற போலி ரசீது முறைகேடு தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப

திருப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற போலி ரசீது முறைகேடு தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் தற்போது நெருப்பெரிச்சல் ஜி.என்.காா்டன் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பத்திரப்பதிவு அலுவலகமானது திருப்பூா் தெற்குப் பகுதியில் இருந்து 20 முதல் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. இந்த அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் 2 அல்லது 3பேருந்துகள் மாறித்தான் செல்ல வேண்டியுள்ளது. இந்த அலுவலகத்தில் எந்தவிதமான கட்டமைப்புகளும் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிவறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. திருப்பூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலி ரசீது மூலமாக பல கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. இதில், 2 சாா்பதிவாளா்கள் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்த முறைகேட்டில் தொடா்புடைய நபா்கள் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனா்.இதனால் ஆவணங்களை அழிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக முறைகேடு தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும்,ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் தெற்கு பகுதி அலுவலகங்களை பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com