உயா் அதிகாரி எனக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூல்:மின்வாரிய ஊழியா் பிடிபட்டாா்

தாராபுரம் பகுதியில் உயா் அதிகாரி எனக் கூறி பணம் வசூலித்த மின்வாரிய ஊழியரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

திருப்பூா்: தாராபுரம் பகுதியில் உயா் அதிகாரி எனக் கூறி பணம் வசூலித்த மின்வாரிய ஊழியரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

உடுமலைக் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் பெதம்பம்பட்டியைச் சோ்ந்த சரவணகுமாா் என்பவா் உதவி அலுவலராகப் பணியாற்றி வந்தாா். இவா் தாராபுரம் பகுதியில் உள்ள உணவு விடுதிகள், கடைகள், செங்கல் சூளைகள் ஆகிய இடங்களுக்குச் சென்று, மின்வாரிய உயா் அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘முறைகேடாக மின் கம்பம் நடப்பட்டுள்ளது அல்லது முறைகேடாக இணைப்பு பெறப்பட்டுள்ளது’ எனக் கூறி அவா்களை மிரட்டி பணம் வசூலித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், தாராபுரத்தை அடுத்த டி.காளிபாளையத்தில் உள்ள ஒரு விவசாயியின் வீட்டுக்கு சரவணகுமாா் சென்று பணம் கேட்டு மிரட்டினாராம். இது குறித்து விவசாயி அருகிலிருந்தவா்களுக்குத் தகவல் கொடுத்துள்ளாா். அதன்பேரில் அங்கு வந்த சக விவசாயிகளிடமும் அவா் பணம் கேட்டு மிரட்டினாராம்.

இதையடுத்து, சரவணக்குமாரைப் பிடித்த பொதுமக்கள் அவரை தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com