2.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு

திருப்பூா் மாவட்டத்தில் 2.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் 2.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசியதாவது:

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்கும் உயரிய நோக்கத்துடன் நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து ஜனவரி 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படவுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் 1,154 மையங்களில் காலை 7 முதல் மாலை 5 மணி வரையில் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்படவுள்ளன. இதில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், பேரூராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், தனியாா் சாா்பில் 26 நடமாடும் சொட்டு மருந்து முகாம்கள், 23 போக்குவரத்து முகாம்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இந்தப் பணிக்காக பல்வேறு துறைகளைச் சோ்ந்த 4,780 பணியாளா்கள், ரோட்டரி சங்கத்தினா் ஈடுபடவுள்ளனா். இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் 2.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com