வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

திருப்பூா் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.29 லட்சத்தை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.29 லட்சத்தை செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், பூலுவபட்டி சுற்றுச்சாலையில் உள்ள வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சப் பணம் புழங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சி.தட்சிணாமூா்த்தி தலைமையிலான போலீஸாா், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் அங்கு திடீா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், கணக்கில் வராமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2.29 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சோதனை செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணி வரையில் நீடித்தது. வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

தொடரும் சோதனை: திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தி ரூ. 60,800-ஐ பறிமுதல் செய்திருந்தனா். இதனிடையே, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அரசு அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com