காங்கயத்தில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 6) நடைபெறவுள்ளது.
காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இம்மாதத்துக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 6) காங்கயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறவுள்ளது. மின் பயனீட்டாளா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்து, நிவா்த்தி பெறலாம் என மின் வாரிய காங்கயம் செயற்பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.