5 மாவட்டங்கள் வழியாக அவசரமாகச் சென்ற ஆம்புலன்ஸுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு

5 மாவட்டங்கள் வழியாக அவசரமாகச் சென்ற ஆம்புலன்ஸுக்கு, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் பொதுமக்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்து ஒத்துழைப்பு தந்தனர்.
உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட குழந்தை.
உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட குழந்தை.

5 மாவட்டங்கள் வழியாக அவசரமாகச் சென்ற ஆம்புலன்ஸுக்கு, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் பொதுமக்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்து ஒத்துழைப்பு தந்தனர்.

தஞ்சாவூர், காந்திஜி நகரைச் சேர்ந்த மூன்று மாத பெண் குழந்தை மூச்சு வாங்கச் சிரமப்பட்டதால், அக்குழந்தையை தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என தெரிய வந்தது. இதையடுத்து நவீன வசதிகள், சிறப்பு மருத்துவர்கள் உள்ள கோயமுத்தூர் தனியார் மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

தாமதமின்றி ஆம்புலன்ஸ் செல்ல சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். தகுந்த உயிர் காக்கும் கருவிகள், மருத்துவக் குழுவினர், குழந்தையின் தாயுடன் தஞ்சாவூரிலிருந்து திங்கள்கிழமை ஆம்புலன்ஸ் புறப்பட்டது. வழியோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் தஞ்சாவூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்கள் வழியாக 265 கிலோ மீட்டர் தூரத்தை 3.15 மணி நேரத்தில் கடந்து கோயமுத்தூர் சென்றடைந்தது.

உதவிக்காக 2 ஆம்புலன்ஸுகளும், அந்தந்த மாவட்ட காவல்துறை வாகனமும் உடன் சென்றன. முன்கூட்டியே கிடைத்த தகவல்படி, ஆம்புலன்ஸ் வெள்ளக்கோவில் வருவதற்கு அரை மணி நேரம் முன்பிருந்தே போலீஸார், தன்னார்வலர்கள், டாக்ஸி, கார், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் மற்ற வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டு சாலையை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com